வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் கைதாகிப் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபர்களே, கடந்த சில நாள்களாக நடைபெறும் வாள்வெட்டுக்களுடன் தொடர்புபட்டுள்ளார்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர். அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக வாள்வெட்டுச் சம்பவங்கள் திடீரென அதிகரித்துள்ளன. 4 நாள்களில் 7 சம்பவங்களில் 9 பேர் காயமடைந்தனர்.
‘‘பொலிஸார் சுற்றுக் காவல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.எனினும் சுற்றுக் காவல் அணிகள் ஒரு இடத்தைக் கடக்கும் வரை காத்திருந்து அந்தப் பகுதிக்குச் சென்று வாள்வெட்டு நடத்துகிறார்கள். பொலிஸாருக்கு சவால் விடும் வகையில் இந்த வாள்வெட்டுக் கும்பல்கள் செயற்படுகின்றனவா என்ற கோணத்திலும் நாம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம்’’ என்றார் அந்த அதிகாரி.
கடந்த காலங்களில் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்ட சிலர், தற்போதைய வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளமையைத் தாம் அவதானித்துள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
‘‘அவர்களை அடையாளம் கண்டுள்ளோம். விரைவில் கைது செய்வோம்’’- என்றார் அந்த அதிகாரி.
Post a Comment