பல தரப்புக்களும் எதிர்பார்த்துள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அனேகமாக ஜனவரி 29ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் அறிவித்துள்ளன.27ஆம் திகதி தேர்தலை நடத்துவது என்று கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டிருந்தாலும் அந்தத் திகதியில் தேர்தலை நடத்துவதில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு உடன்பாடில்லை என்று தெரியவருகிறது.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடத்துவதற்குரிய தடைகள் எல்லாம் கடந்த வாரம் நீக்கப்பட்டு விட்டன. இதன் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவும் கூடிக் கலந்துரையாடல் நடத்தியது.
ஜனவரி மாதம் 20ஆம் திகதிக்கும் 31ஆம் திகதிக்கும் இடையில் ஓர் நாளில் தேர்தல் நடத்தப்படக்கூடும் என்று அந்த ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
எனினும் பெரும்பாலும் ஜனவரி 29ஆம் திகதி தேர்தல் நடக்கும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தேர்தல் நடத்துவதற்கான திகதியை அரசியல் தலைவர்கள் தீர்மானிப்பது தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுயாதீனத்தில் தலையிடுவதாக அமையும் என்று ஆணைக்குழு உறுப்பினர்கள் கருதுகின்றனர் .
Post a Comment