Ads (728x90)

சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. புறநகரில் உள்ள ஏரிகள் நிரம்பி வருகிறது. இதனால் எந்த நேரமும் ஏரியின் உபரி நீர் திறக்கப்பட்டோ, அல்லது கரை உடைந்தோ 2015ம் ஆண்டு சென்னை வெள்ளத்தில் மூழ்கியது போன்று இந்த ஆண்டும் மூழ்கும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. கமல்ஹாசனும் இது குறித்து எச்சரித்துள்ளார். அவர் நேற்று தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது:

சென்னையின் தென் மேற்கு வடமேற்கு பகுதிகள் நீரில் மூழ்க தயாராகி கொண்டிருக்கின்றன. இது அரசுக்கும் மக்களுக்கும் கொடுக்கப்படும் முன்னறிவிப்பு . சேலையூர் ஏரி, கூடுவாஞ்சேரி நந்திவரம் பெல்ட் ஏரி சிட்லபாக்கம் ஏரி, நாராயணபுரம் எரி, முடிச்சூர் எரிகள் நிரம்பி வழிய அதிக நேரமாகாது.

நீர் நிலை ஆர்வலர்களுக்கோ, மக்களுக்கோ இவ்வேரிகளின் கொள்ளளவு தெரியாது. நீர் வரத்துப்பாதைகளும் தெரியாது. தெரியாது என்பதை விட நில அபகரிப்புக்கு வசதியாய் தெரியாமல் வைக்கப்பட்டிருக்கிறது என்பதே கசந்து குமட்டும் உண்மை.

நன்மங்கலத்தில் இருந்து மற்றொரு ஏரிக்கு நீர் வரும் பாதைய மறித்துக் கட்டப்பட்ட கட்டடத்தை இடிக்க நீதிமன்றம் 2015லேயே உத்தரவு பிறப்பித்து விட்டது. எனினும் இன்றுவரை சட்டம் மீறப்பட்டே வருகிறது. அப்பகுதிகளில் வாழும் மக்கள் விழிப்புடன் இருக்கவும், குரலெழுப்பவும் ஊடகங்கள் உதவ வேண்டும். வரும்முன் காப்போம் நித்திரை கலைப்போம் இவ்வாறு நடிகர் கமல் பதிவிட்டுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget