Ads (728x90)

இந்துத் தீவிரவாதம் இல்லை என்று இனி யாரும் சொல்ல முடியாது என நடிகர் கமல்ஹாசன் சர்ச்சையை கிளப்பி உள்ளார். இதற்காக அவர் மீது உத்திர பிரதேசம் மாநிலத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசியல் பயணத்தை நோக்கி தீவிரமாக பயணித்து கொண்டிருக்கும் கமல்ஹாசன், வார இதழ் ஒன்றில் தொடர் எழுதி வருகிறார். இதில், கேரள முதல்வர் பினராய் விஜயன், தமிழகத்தில் இந்துத்துவ சக்திகள் மெதுவாக ஊடுருவுவது பற்றி கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்த கமல்,

முன்பெல்லாம், இத்தகைய இந்து வலதுசாரியினர் வன்முறையில் ஈடுபடாமல், வாதப் பிரதிவாதங்கள் மூலமே எதிராளியை கையாண்டனர். இப்போது அது ஒத்து வராததால் அவர்களும் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர். 'எங்கே ஓர் இந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள்?' என்ற சவாலை இனி அவர்கள் விட முடியாது. அந்த அளவுக்கு அவர்கள் கூட்டத்திலும் தீவிரவாதம் பரவியிருக்கிறது என்று கூறியிருந்தார்.

இதற்கு பா.ஜ., சிவசேனா உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கமலின் சர்ச்சை பேச்சை கண்டித்து உ.பி., மாநிலம் பனராஸில் வக்கீல் ஒருவர் கமல் மீது புகார் செய்துள்ளார். இதை ஏற்று போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்து மதத்திற்கு எதிராக கருத்து தெரிவித்தல், அவதூறு பரப்புதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கமல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget