
உள்ளுராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக விளக்கமளிக்கும் கலந்துரையாடல் இன்று குருமன்காட்டிலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடல் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளருமான கே. காதர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றது.
வன்னி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்களுக்கு புதிய உள்ளுராட்சி தேர்தலின்போது எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
இதில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினரால் விளக்கமளிக்கப்பட்டுள்ளதுடன் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா போன்ற பகுதிகளின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
Post a Comment