Ads (728x90)

போலியான செய்திகளையும் அவதூறு பிரச்சாரங்களையும் மேற்கொள்ளும் இணையத்தளங்கள் மற்றும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அரச தலைவா் மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அரச தலைவருடான சந்திப்பின் போது இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சுர் ராஜித சேனாரட்ன கோரிக்கை விடுத்தாா்.
இது தொடா்பில் சுகாதார அமைச்சா் தொிவிக்கையில்
அவதூறு பிரச்சாரம் மற்றும் போலி செய்திகளை வெளியிடும் ஒரு சிலரை தண்டித்தால், சீரிய ஒழுக்கமுடைய ஊடக கலாச்சாரத்தை உருவாக்க முடியும்

இணையத் தளங்களில் வெளியாகும் ஆபாச வார்த்தைகளை பார்த்துவிட்டு சிறுவர்கள் அது குறித்து பெரியவர்களிடம் கேட்கும் போது, பெரியவர்கள் தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்படுகின்றனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளாா்.

Post a Comment

Recent News

Recent Posts Widget