புதுக்குடியிருப்புப் பகுதியில் விடுதலைப் புலிகள் புதைத்த தங்கத்தை தேடி தென்னிலங்கையில் இருந்து வந்து தங்கம் தோண்டிய 11 பேரை புதுக்குடியிருப்பு பொலிஸார் நேற்றுக் கைதுசெய்துள்ளனர்.இவர்கள் தோண்டும் நடவடிக்கைக்கு முன்னர் பூசைவைத்து தேங்காய் உடைத்துள்ளார்கள். எனவே இவர்களுக்கு நம்பகரமான தகவல் கிடைத்தி ருக்கக் கூடும் என நம்பப்படுகின்றது.
இவர்கள் வந்த அதிசொகுசு ஊர்திகள் மற்றும் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
குறிப்பிட்ட நபர்கள் மாத்தறை, கொழும்பு, கண்டி, கொட்டாவ, கடவத்த, கொட்டகேன, கிறான்பாஸ், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற இடங்களைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவர்களை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். சில வாரங்களுக்கு முன்னரும் தங்கம் தோண்டிய குற்றச்சாட்டில் தென்பகுதியைச் சேர்ந்த மந்திரவாதி உட்படச் சிலர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment