வடக்கு மாகாண சபையில் 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையில் சிட்டை சமர்ப்பிக்கப்பட்ட, 1400 மில்லியன் ரூபாவில் 500 மில்லியன் ரூபா கொழும்பு திறைசேரியால் மாகாணத் திறைசேரிக்கு விடுவிக்கப்பட்டது.வடக்கு மாகாண சபையில் 2017ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றங்களுக்கான ஒதுக்கீடாக 3 ஆயிரத்து 411 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இதில் கடந்த நவம்பர் மாதம் ஆயிரத்து 400 மில்லியன் ரூபாவுக்கான சிட்டைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அதற்கான கொடுப்பனவை கொழும்பு திறைசேரி வழங்கியிருக்கவில்லை.
குறித்த விடயம் தொடர்பில் வரவு செலவுத் திட்ட விவாதத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டிய வேளை இரு நாள்களில் அதிக தொகை விடுவிக்கப்படும் என பதிலளிக்கப்பட்டது. இதன் பிரகாரம் நேற்றுமுன்தினம் குறித்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மாகாண திறைசேரி வட்டாரங்களுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது நிதி கிடைத்ததை உறுதி செய்தனர்.
Post a Comment