SriLankan-News சேதமடைந்த நாணயத் தாள்களை மாற்றுவதற்கு மார்ச் மாதம் வரை அவகாசம்! 12/31/2017 03:41:00 PM A+ A- Print Email சேதமடைந்த நாணயத் தாள்களை மாற்றுவதற்கு, இலங்கை மத்திய வங்கியால் அறிவிக்கப்பட்ட கால எல்லை மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த நாணயத்தாள்களை டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையே பயன்படுத்த முடியும் என்று மத்திய வங்கி ஏற்கனவே அறிவித்திருந்தது. தற்போது வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களது நலன் கருதி கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று வங்கி ஆளுனர் அறிவித்துள்ளார்.
Post a Comment