
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் அரச தலைவருமான மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அணியினருக்கும் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினருக்கும் இடையிலான தொடர் பேச்சுக்கள் தோல்வியடைந்த நிலையில், முன்னணி பௌத்த பிக்குகளின் தலையீட்டால் மற்றுமொரு இணக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அந்தப் பிக்குகள் முன்னாள் அரச தலைவர் மகிந்தவுடன் பேச்சு நடத்திப் பெறப்பட்ட யோசனைகளின் அடிப்படையில் சில நிபந்தனைகளுடன் கூடிய வரைவுத்திட்டம் ஒன்றை அரச தலைவரிடம் முன்வைத்தார்கள்.
ஆனாலும், அந்தத் திட்டத்தில் உள்ள நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று அரச தலைவர் மைத்திரி திட்டவட்டமாக நிராகரித்துவிட்டார் என்று அறியமுடிகின்றது.
Post a Comment