Ads (728x90)

பயங்கரவாதிகள் விஷயத்தில், அமெரிக்காவின் எச்சரிக்கை பட்டியலில், பாகிஸ்தான். உள்ளதாக, அமெரிக்க துணை அதிபர், மைக் பென்ஸ் கூறியுள்ளார்.தெற்காசிய நாடுகளில் ஒன்றான, ஆப்கானிஸ்தானுக்கு, அமெரிக்க துணை அதிபர், மைக் பென்ஸ் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அங்கு நிருபர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:

பாகிஸ்தான் நீண்ட காலமாக, தலிபான் உள்ளிட்ட பல பயங்கரவாத அமைப்புகளுக்கு, புகலிடம் அளித்து வருகிறது. இதனால், பாகிஸ்தான் கை, எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டிய நாடுகள் பட்டியலில், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் வைத்துள்ளார். அதிபர் டொனால்டு டிரம்ப், ஏற்கனவே சொன்னதை மீண்டும் வலியுறுத்தி கூறுகிறேன்.

அமெரிக்காவுடன் நட்புறவு வைத்திருந்தால், பாகிஸ்தான் அதிக பலன் கிடைக்கும். மாறாக, கிரிமினல்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் ஆதரவு அளித்தால், எண்ணற்ற பயன்களை, பாகிஸ்தான் இழக்க வேண்டி இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget