Ads (728x90)

தமிழகத்தில் ஊழல் பெருத்து விட்டதாக, மத்திய உளவுத் துறை அதிகாரிகள், மத்திய அரசுக்கு தகவல் அனுப்பி உள்ள செய்தி வெளியாகி, மாநில அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள் சிலரை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

தமிழக அரசு குறித்து மத்திய அரசுக்கு ஏகப்பட்ட ஊழல் புகார்கள் வரவே, அது குறித்து விசாரிக்குமாறு, மத்திய உளவுத் துறை அதிகாரிகளை, அரசுத் தரப்பில் பணித்துள்ளனர்.

அதன் அடிப்படையில், ஒரு மாத காலமாக தீவிர விசாரணையில் இறங்கிய மத்திய அரசின் உளவுத் துறை, தமிழக அரசு மீது குற்றம்சாட்டப்படும் தார் ஊழல் முதல் முட்டை ஊழல் வரை பல்வேறு தரப்பிடம் இருந்து கைப்பற்றி, மத்திய அரசுக்கு அறிக்கையாக அனுப்பி உள்ளனர்.

முதல்வர் பழனிச்சாமி மீதும் பல குற்றச்சாட்டுக்கள் இருப்பதை, மத்திய அரசுக்கு, தகவலாக அனுப்பி உள்ளனர். குறிப்பாக, முதல்வர் பழனிச்சாமியின் முக்கிய பினாமிகளாக ஆறு பேர் இருப்பதாகவும், அவர்கள், தமிழக அரசின் மத்திய மாவட்டங்களில் தாறுமாறாக தொழில் நிறுவனங்களையும், சொத்துக்களையும் வாங்கிக் குவித்து வருவதாகவும் கண்டறிந்துள்ளனர்.

மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராக இருக்கும் ஒருவர், அ.தி.மு.க.,வின் எடப்பாடி நிர்வாகி ஒருவர், நெருங்கிய உறவினர் இருவர், சேலம் மாவட்ட முன்னாள் எம்.எல்.ஏ., ஒருவர், ஈரோட்டை சேர்ந்த இன்னொரு உறவினர், ஆகியோர் குறித்துத்தான், ஏகப்பட்ட புகார் கிளம்பி உள்ளன.

விரைவில் இவர்கள் ஆறு பேரையும் முக்கியமாக வைத்து, வருமான வரித் துறை சோதனை நடத்த வாய்ப்பிருப்பதாகவும், மத்திய உளவுத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget