Ads (728x90)

இம்முறை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களில் சித்தியடையாத 20 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயன்பெறும் வகையில் உயர் தர வகுப்பில் தொழில் கல்வி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்காக வேண்டி தேசிய ரீதியில் 150 பாடசாலைகள் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும், எதிர்வரும் பெப்ருவரி மாதம் இக்கற்கை நெறிகளுக்கு மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பாடசாலைகள் எதுவென்பதை எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பத்தில் அறிவிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு கூறியுள்ளது.
இப்பாடசாலைகளில் உயர் தர வகுப்பில் 26 பாடநெறிகள் மாணவர்களின் தெரிவுக்காக விடப்படும். சம்பந்தப்பட்ட பாடங்களைக் கற்பிக்க தேவையான 2000 ஆசிரியர்கள் ஜனவரி ஆரம்பத்தில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget