
இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில், ஈரானில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0ஆக பதிவாகியது. இதனைத் தொடர்ந்து 10 நிமிட இடைவேளையில், ரிக்டர் அளவில் 5.0-ஆக மற்றுமொரு நில நடுக்கம் ஏற்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் வெளிவரவில்லை. எனினும் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ஈரான் - இராக் எல்லையுள்ள கேர்மான்ஷா மாகாணத்தில் ரிக்டர் அளவில் 7.3 அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 400 பேர் பலியாகினர்.
ஈரானை பொறுத்தவரை அந்த நாடு தொடர்ந்து நிலநடுக்க பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகிறது.
1990களில் ஈரானில் ஏற்பட்ட நில நடுக்கத்துக்கு சுமார் 40,000 பேர் பலியாகினர். 3,00,000க்கும் அதிகமான நபர்கள் வீடுகளை இழந்தனர்.
கடந்த 2005, 2012 ஆகிய வருடங்களில் ஈரானில் ஏற்பட்ட நில நடுக்கத்துக்கு முறையே 600, 300 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment