
இதுதொடர்பாக பிரதமர் அலுவலக ட்விட்டர் பக்கம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘’இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் பிரதமரைச் சந்தித்தனர். அவர்களின் திருமணத்துக்கு மோடி வாழ்த்து தெரிவித்தார்’’ என்று கூறப்பட்டுள்ளது.
இத்தாலியில் டிசம்பர் 11 அன்று தனிப்பட்ட முறையில் நடைபெற்ற நிகழ்வில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இது குறித்து விராட் கோலி தன் ட்விட்டரில் பதிவிடும்போது, “வாழ்நாள் முழுதும் அன்பின் பிணைப்பில் இணைய இன்று இருவரும் உறுதிமொழி பூண்டோம். உங்களுடன் இந்தச் செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறோம். இந்த அழகிய நாள் எங்கள் குடும்பத்தினர், ரசிகர்கள், நலம் விரும்பிகள் ஆகியோருடன் சிறப்பு வாய்ந்ததாக விளங்குகிறது. எங்கள் பயணத்தின் முக்கிய அங்கம் வகிப்பதற்கு நன்றி” என்று தெரிவித்திருந்தார்.
இத்தாலியில் திருமணம் செய்துகொண்டதால் கோலி தம்பதி, டிசம்பர் 21-ம் தேதி டெல்லியில் உறவினர்களுக்காக வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.
அதேபோல டிச.26-ம் தேதி மும்பையில் கிரிக்கெட் சகாக்கள் மற்றும் தொழில்துறை நண்பர்களுக்குத் தனியாக வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தவும் கோலி, அனுஷ்கா இருவரும் திட்டமிட்டுள்ளனர்.
Post a Comment