Ads (728x90)

எனது ஆட்சிக்காலத்தில் மத்திய வங்கி ஊழல் இடம்பெற்றதா என ஆராயவே வலியுறுத்தப்பட்டுள்ளதே தவிர நான் குற்றவாளி என அறிக்கையில் எந்தவொரு இடத்திலும் சுட்டிக்காட்டப்படவில்லை. சந்தேகம் இருக்கும் பட்சத்தில் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவேன் என்கிறார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ. பிணைமுறி குறித்து  உரையாற்ற  எனக்கு எந்தத் தேவையும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் பாராளுமன்றத்தில் குழப்பங்களை ஏற்படுத்த நாம் முயற்சிக்கவில்லை. அரசாங்கத்தில் இருந்துகொண்டு இவர்கள் நடந்துகொள்ளும் விதம் மிகவும் மோசமானது. எமது அணியின் சிரேஷ்ட உறுப்பினர் மீது அவர்களின் இளம் உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தினர். இது தந்தைக்கு மகன் தாக்குதல் நடத்துவதற்கு ஒப்பான செயலாகும். ஆகவே ஐக்கிய தேசியக் கட்சி இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றாலும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய வங்கி பிணைமுறி ஊழல் விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் தனது பங்கிற்கு கருத்து முன்வைக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள நிலையில் அது குறித்து கருத்து தெரிவிக்கையில் மஹிந்த ராஜபக் ஷ எம்.பி இதனைக் குறிப்பிட்டார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget