
அமெரிக்காவின் ஹவாய் தீவின் ஹோனோலுலு நகரில் உள்ள ராணுவ படைத்தள தலைமையகத்தில் (பசிபிக் கமாண்ட்) அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஜிம் மேட்டிஸ் மற்றும் தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர் சாங் யூங்-மூ நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது மேட்டிஸ் கூறிய தாவது:
அமைதியை விரும்பும் நாடு என்ற வகையில், தென்கொரியாவும் வடகொரியாவும் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் பங்கேற்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதை வரவேற்கிறோம்.
அதேநேரம் அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனையை கைவிட வலியுறுத்தும் வகையில், சர்வதேச அளவில் வடகொரியாவுக்கு பொருளாதார ரீதியாக மேலும் அழுத்தம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிபர் கிம் ஜாங் உன் தலைமையிலான வடகொரிய அரசு உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண தூதரக ரீதியில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இப்போதைக்கு ராணுவ நடவடிக்கை எடுக்கப்போவதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Post a Comment