
“சர்வதேச விசாரணை, மின்சாரக்கதிரை அழுத்தங்கள் எமக்கெதிராக எழுந்த நிலையில் நானே நாட்டினை மீட்டெடுத்தேன்” எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று பிற்பகல் அனுராதபுரம் சல்காது விளையாட்டரங்கில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகள் அனைத்தும் பங்குபற்றிய இம்மாநாட்டில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
“இந்த நாடு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையில் கீழேயே கட்டியெழுப்பபட்டுள்ளது. இந்த வரலாற்றை யாராலும் நிராகரிக்க முடியாது. கடந்த காலத்தில் ஊழல், குற்றம், சர்வாதிகாரம் ஆகிய பாதைகளில் பயணித்த இந்நாட்டை நாம் முன்வந்து மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம்.
“இப்போது, மக்களின் உண்மையான பிரச்சினைகளை இனங்கண்டு நாட்டினை கட்டியெழுப்பும் அரசாங்கம் ஒன்று தேவைப்படுகின்றது. அதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பலப்படுத்த வேண்டும். நாட்டினை நேசிக்கும் மக்கள் அனைவரும் ஸ்ரீலங்கா சுதந்தர கட்சியுடன் இணைந்து செயற்பட வேண்டும்.”
இவ்வாறு ஜனாதிபதி அங்கு தெரிவித்தார்.
Post a Comment