புகையிலை உற்பத்தியை 2020ஆம் ஆண்டு தடை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், அது தொடர்பான சுற்றுநிரூபத்தை தற்போது சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள், அதிகாரிகள் மற்றும் நபர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்காரணமாக, குறித்தத் தடை தொடர்பான உத்தியோகப்பூர்வ கடிதம் இல்லாவிட்டாலும், அடிமட்ட அரச அதிகாரிகள் புகையிலை உற்பத்தியை தடைசெய்வதற்கான நடவடிக்கையில் இருப்பதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் புகையிலை உற்பத்தித்துறை கல்விப் பிரிவு ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக இந்த பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் மஹேஸ் ராஜசூரிய தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற வேலைத்திட்டத்தில் கலந்துக்கொண்டப் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை புகையிலை நிறுவனமே புகையிலை உற்பத்தி தடை செய்வதில் தடையை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
புகையிலை உற்பத்தியாளர்களை நிரந்தர கடனாளிகளாக ஆக்கியது நிறுவனங்கள். எனவே இந்த நிலைத் தொடர்பில் விவசாயிகளை தெளிவுப்படுத்துவதுடன், நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகளிடையேயான உறவுகளை நிறுத்துவதன் மூலம் புகையிலை உற்பத்தியை மேலும் குறைக்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment