Ads (728x90)

நாடு பூராகவும் டீசலுக்குத் தட்டுபாடு நிலவுவதாக போலி பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை எரிபொருள் கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது.

இணையங்கள் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாக குறித்த பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும், சாதாரண மக்களை குழப்பமடையச் செய்யவும், நாட்டை சீர்குலைக்கும் நோக்குடன், இந்தப் போலி பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக எரிபொருள் கூட்டுதாபன அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

கொலன்னாவை மற்றும் முத்துராஜவல எரிபொருள் களஞ்சியசாலைகளில் போதுமானளவு எரிபொருள் கையிருப்பில் இருப்பதாகவும், எனவே போலி பிரசாரங்களால் மக்கள் கலவரமடையத் தேவையில்லை என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, இவ்வாறான போலி பிரசாரங்களை முன்னெடுக்கும் நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget