
ஸ்மார்ட் யுஆர்எல்-களை பயனர்கள் ஐஓஎஸ், ஆன்ட்ராய்டு அல்லது இணையத்தளங்களில் மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ள முடியும். ஏப்ரல் 13-ம் தேதி முதல் தற்சமயம் கூகுள் யுஆர்எல் ஷார்ட்னர் சேவையை பயன்படுத்துவோர் மட்டும் ஒரு வருடத்திற்கு புதிய சிறு லின்க்-களை உருவாக்க முடியும் என மென்பொருள் பொறியாளரான மைக்கேல் ஹெர்மான்டோ தனது வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே உருவாக்கப்பட்ட சிறிய லின்க்களில் தொடர்ந்து சேவையை பயன்படுத்த முடியும். அந்த வகையில் மார்ச் 30, 2019 வரை இந்த சேவைகள் சீராக இயங்கும் என வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இணையத்தில் பிரபல சேவையாக இருக்கும் கூகுள் யுஆர்எல் ஷார்ட்னர் 2009-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
Post a Comment