
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ஈரானின் மேற்கு பதியிலுள்ள கேர்மன்ஷா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியது. இதில் 54 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.
ஈரானின் அவசரக் கால நெருக்கடி மேலாண்மை அமைப்பின் தலைவர் ரிசா இந்த நிலநடுக்கம் குறித்து தேசிய தொலைக்காட்சியில் கூறும்போது, "இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது" என்று கூறியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இதே பகுதியில் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவான சக்தி வாய்ந்த நில நடுக்கத்துக்கு 500க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 8,000 பேர் வரை காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment