Ads (728x90)

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. அதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், அமெரிக்க வீரர் ஜான் இஸ்னெர் ஆகியோர் முன்னேறினர்.

நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சொந்த மண்ணில் விளையாடிய ஜான் இஸ்னெர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடினார். முதல் செட்டில் இருவரும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். இறுதியில், ஸ்வெரேவ் முதல் செட்டை 7-6 (7-4) என கைப்பற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் அதிரடியாக விளையாடிய ஜான் இஸ்னெர் இரண்டாவது செட்டை 6-4 என கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது செட்டில் சிறப்பாக விளையாடிய இஸ்னெர் அந்த செட்டையும் 6-4 என கைப்பற்றிமார். இதன்மூலம் 6-7 (4-7), 6-4, 6-4 என்ற செட்களில் வெற்றி பெற்ற இஸ்னெர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை சொலேன் ஸ்டெப்ஹன்ஸ் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். இதன்மூலம் இந்தாண்டு நடைபெற்ற மியாமி ஓபன் தொடரின் ஒற்றையர் பிரிவின் சாம்பியன் பட்டங்களை அமெரிக்காவை சேர்ந்தவர்களே வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget