
பள்ளி பஸ் அளவிலான இந்த விண்வெளி ஆய்வு மையம், பூமியின் வான்பரப்பில் 70 கி.மீ., தொலைவில் நுழைந்த போது காற்றின் உராய்வால் தீப்பிடித்து எரிந்து உருகிய நிலையில் கடலில் விழுந்துள்ளது. விண்வெளி ஆய்விற்கான 2011 ம் ஆண்டு சீனா அனுப்பிய இந்த விண்வெளி ஆய்வு மையம் 2013 ம் ஆண்டு செயல்பாட்டை இழந்தது.
இந்த ஆய்வு மையமானது ஏப்ரல் முதல் வாரத்தில் பூமியில் விழும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஆய்வு மையம், சீன நேரப்படி இன்று காலை 8.15 மணிக்கு பசிபிக் கடலில் விழுந்துள்ளதாக சீன ஆய்வு கழகம் தெரிவித்துள்ளது.
Post a Comment