
கையில் இருந்த ஒரு படமும் இன்னும் துவங்காததால் வருத்தத்தில் இருக்கிறார் காஜல் அகர்வால். தமிழில் பொம்மலாட்டம் படத்தில் அறிமுகமானவர் காஜல். தொடர்ந்து முன்னணி நடிகையாக அஜித், விஜய், சூர்யா, விஷால், கார்த்தி என்று ஒரு ரவுண்டு வந்தார்.
ஆனால் இப்போது அவருக்கு படங்களே இல்லை. குயின் இந்தி பட ரீமேக்காக உருவாகும் `பாரிஸ் பாரிஸ்' தமிழ் படத்தில் ஒப்பந்தமானார் காஜல் அகர்வால். முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை.
இதனால் வருத்தத்தில் இருக்கும் காஜல் அகர்வால் ஒரு அதிரடி முடிவு எடுத்திருக்கிறார். இதற்கு முன்பு முன்னணி ஹீரோக்களுடன் மட்டும்தான் நடிப்பேன் என்று கட்டுப்பாடு விதித்திருந்த காஜல் அந்த கட்டுப்பாட்டை உடைத்துவிட்டார். இனி இளம் ஹீரோக்கள் படங்களிலும் நடிக்க இருக்கிறார். அதேபோல் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளையும் கேட்டு வருகிறார்.
Post a Comment