
கதாநாயகியை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. கதாநாயகியாக அஞ்சலி நடிக்கிறார். பிரவீன் பிக் காட் டைரக்டு செய்ய, அஜய் பணிக்கர் தயாரிக்கிறார். படத்தை பற்றி அவர் கூறியதாவது:-
எங்கள் நிறுவனத்தின் இரண்டாவது படம், இது. 50-க்கும் மேற்பட்ட கதைகளை கேட்டு, இறுதியாக இந்த கதையை தேர்ந்தெடுத்தோம். ஒரு திகில் படத்துக்கான அத்தனை அம்சங்களும் இதில் இருப்பதாக உணர்ந்தோம். நகைச்சுவை இல்லாத திகில் படமாக இது தயாராகிறது. இந்த படத்தின் கதை சம்பவங்கள், எல்லோருடைய வாழ்க்கையிலும் நடந்திருக்கும். டைரக்டர் பிரவீன் கதை சொல்லும்போது, படம் பார்க்கிற அனுபவம் ஏற்பட்டது. படத்தில், மெய்சிலிர்க்கும் விஷயங்கள் நிறைய உள்ளன.
படத்தின் கதாநாயகி அஞ்சலி பேய் வேடத்தில் நடிக்கிறார். அவருடைய அர்ப்பணிப்பும், அழகிய தோற்றமும், பக்கத்து வீட்டுப்பெண் போன்ற கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தும்.
படத்துக்கு பின்னணி இசை வலுவாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அரோல் கரோலியை ஒப்பந்தம் செய்தோம். படத்தில் மூன்று பாடல்கள் உள்ளன. மூன்றுமே திரைக்கதையோடு இணைந்த பாடல்கள்.
Post a Comment