Ads (728x90)

இந்தோனேஷியாவின் வடகிழக்கில் ஆகங் எரிமலை கடந்த வருடத்தில் இருந்து குமுறி கொண்டு இருந்துள்ளது.  இதனால் கடந்த டிசம்பரில் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது.  அதனை சுற்றியிருந்த ஆயிரக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இந்த நிலையில், எரிமலையில் இருந்து 8,200 அடி உயரத்திற்கு சாம்பல் புகை பரவி சென்றது.  இதனை தொடர்ந்து செந்நிறத்தில் நெருப்பும் காணப்பட்டது.

இதனால் சர்வதேச விமான நிலையம் இன்று மூடப்பட்டது.  48 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.  இவற்றில் 38 சர்வதேச விமானங்களும் மற்றும் 10 உள்நாட்டு விமானங்களும் அடங்கும்.  விமான சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில் 8,334 பயணிகள் பாதிப்படைந்துள்ளனர்.  இன்று இரவு 7 மணிவரை விமான நிலையம் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என பேரிடர் நிவாரண கழகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

எரிமலை சாம்பல் வழியே விமானங்கள் பறந்து சென்றால் விமான இயந்திரங்கள் பாதிப்படையும்.  எரிபொருள் மற்றும் குளிர்விக்கும் சாதனங்கள் தடைபடும்.  தெளிவற்ற பார்வை நிலையும் ஏற்படும்.  இதனால் விமானங்கள் இந்த வழியே பறப்பது தவிர்க்கப்படுகிறது.

Post a Comment

Recent News

Recent Posts Widget