
முற்போக்கு இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் செங்கலடி எல்லை வீதியில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் பாடசாலை மாணவர்கள் என சிலர் கலந்து கொண்டனர்.
கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் காவல்துறையினரே கடமையில் ஈடுபடுங்கள், வேண்டும் வேண்டும் றெஜினாவுக்கு நீதி வேண்டும், அன்று வித்தியா, சேயா இன்று றெஜினா நாளை?, நல்லாட்சி அரசே றெஜினாவின் படுகொலைக்கு நீதி வழங்கு, போன்ற வாசகங்கள் எழுத்தப்பட்ட பதாதைகளை ஏந்திய வண்ணம் கோஷங்களை எழுப்பினர்
Post a Comment