Ads (728x90)

இந்திய வங்கிகள் பலவற்றிலும் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டுவரும் குற்றவாளியாக இருக்கும் மல்லையா, லண்டனில் இருக்கிறார்.

இங்கிலாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

லண்டன் நீதிமன்றத்தில் பணமோசடி தொடர்பாக விசாரணையையும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், விஜய் மல்லையாவின் இந்திய ரூ. 963 கோடி  மதிப்புள்ள சொத்துக்களை பாரத ஸ்டேட் வங்கி ஏலத்தில் விட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியின் மேலாண்மை இயக்குநர் அர்ஜித் பாசு கூறும் போது,  விஜய் மல்லையாவுக்கு எதிராக இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பளிதது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களுக்கு தர வேண்டிய பணத்தை மீட்டு விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. விஜய் மல்லையாவின் இந்திய சொத்துக்களை ஏலம் விட்டதில் ரூ. 963 கோடி மீட்டுள்ளோம் என்றார்.

முன்னதாக, லண்டனில்  விஜய் மல்லையாவுக்கு சொந்தமான இல்லங்களில் சோதனை நடத்தவும் அங்குள்ளவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளலாம் எனவும் லண்டன் ஐகோர்ட் அனுமதி அளித்தது கவனிக்கத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget