
சீனாவின் காங்டாங் மாகாணத்தில் உள்ள புனிங் என்னும் கிராமத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.முதலில் இந்த சம்பவத்தை பார்த்த கிராமத்தார் அதிர்ந்து போயிருக்கின்றனர். அதன்பின்னர் அதனை வீடியோவும் எடுத்துள்ளனர்.
பாம்பு ஒன்று பல காயங்களுடன் எலியோடு போராடி கொண்டிருந்தது. வெகு நேரமாக பாம்பை பல இடங்களில் கடித்த எலி ஒரு கட்டத்திற்கு மேல் பாம்பின் வாயை கவ்வியபடி புதருக்குள் இழுத்து சென்றது. இதனால் பாம்பு நிலைகுலைந்து போனது.
எலியோ விடாப்பிடியாக பாம்பின் தலையைக் கடித்துச் இழுத்துச் சென்று தனக்கு உணவாக்கிக் கொண்டது. பல கோடி ஆண்டுகளாக நடந்து வந்த ஆளுமை கொடுமைகள் இப்போது இயற்கையாகவே தலைகீழாக மாற தொடங்கியிருக்கின்றன என்றுதான் சொல்ல தோன்றுகிறது.
Post a Comment