Ads (728x90)

தாய்லாந்து நாட்டின் வடக்கு பகுதியில் சியாங் ராய் மாகாணத்தின் தலைநகரான சியாங் ராயில் தாம் லுவாங் என்கிற குகை உள்ளது.

இந்தக் குகைக்கு கடந்த மாதம் 23-ந் தேதி உள்ளூர் கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்களை, அவர்களின் பயிற்சியாளர் உல்லாச பயணம் அழைத்துச் சென்றார். அப்போது அங்கு திடீரென பலத்த மழை பெய்ததால், குகைக்குள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் குகையில் இருந்து வெளியே வர முடியாமல், 12 சிறுவர்களும், 25 வயதான பயிற்சியாளர்களும் சிக்கிக்கொண்டனர். அந்த சிறுவர்கள் 11 முதல் 16 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்கள் குகையில் சிக்கிக்கொண்டது குறித்த தகவல்கள், அந்த நாட்டை கடும் அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்தின. அவர்களை தேடி மீட்பதற்கான பணிகள் 9 நாட்களாக பெரிய அளவில் நடந்து வந்தன. இதற்கு இடையே இப்பணியில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த குகை மீட்பு வீரர்கள் 2 பேர் இணைந்தனர்.

தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு, குகையில் சிக்கிக்கொண்ட சிறுவர்கள் உயிருடன் இருப்பதை குகைக்குள் சென்று டார்ச் விளக்கு உதவியுடன் கண்டுபிடித்தனர். சிக்கி 9 நாட்களுக்கு பிறகு சிறுவர்கள், தங்கள் பயிற்சியாளருடன் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அவர்களுடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தாய்லாந்து நாட்டுக்கே மிகுந்த மகிழ்ச்சியை தந்து உள்ளது.

அந்த சிறுவர்களும், அவர்களது பயிற்சியாளரும் குகைக்குள் வெள்ளத்துக்கு மத்தியில் ஒரு ஒரு தொங்கு பாறையில் இருப்பது தெரிய வந்தது. இது குகை நுழைவாயிலில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது. அவர்களிடம் குகை மீட்பு வீரர்கள் பேசினர்.

அப்போது, அந்த சிறுவர்கள் தாங்கள் அனைவரும், பயிற்சியாளருடன் அங்கே இருப்பதாகவும், அதே நேரத்தில் மிகுந்த பசியுடன் இருப்பதாகவும் தெரிவித்தனர்.குகைக்குள் தொடர் மழை காரணமாக வெள்ளம் இருப்பதால், அவர்களை உடனடியாக மீட்க முடியாது என தகவல்கள் கூறுகின்றன. ஏறக்குறைய 4 மாதங்கள் வரை, சிறுவர்களை மீட்பதற்கு ஆகலாம் என கூறப்படுகிறது.

இதனால், சிறுவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சிறுவர்களும், பயிற்சியாளர்களும் குகைக்குள் நிம்மதியாக இருக்கவும், குடும்பத்தினருடன் பேசவும் விளக்கு போடவும், தொலைபேசி வசதி ஏற்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இணையளத கேபிள்கள் அமைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இணையதள கேபிள்கள் அமைத்த பிறகு, சிறுவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் பேசுவது சாத்தியமாகும். வெள்ள நீர் வடிவதற்கான ஏற்பாடுகளையும் பேரிடர் மீட்பு குழுவினர் செய்து வருகின்றனர். தண்ணீர் வேகமாக வடியும் பட்சத்தில், குகைக்குள் சிக்கியுள்ள சிறுவர்கள்  விரைவாக மீட்கப்படும் சாத்தியம் உள்ளது. மீட்பு பணி  100 -சதவீதம் பாதுகாப்பாகவே இருக்கும்” என்று பேரிடர் தடுப்பு துறை துணை இயக்குநர் கோர்ப்சை பூனோரானா தெரிவித்தார்.

முன்னதாக, அண்மையில் சிறுவர்கள் தாங்கள் நலமாக இருப்பதாக பேசிய வீடியோ ஒன்றை  இ தாய்லாந்து கப்பற்படை தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு இருந்தது.

Post a Comment

Recent News

Recent Posts Widget