ஹொரவபொத்தானை அளுத்ஓயா வீதியின் யான் ஓயா பாலத்திற்கு அருகிலிருந்து இன்று ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பையொன்றில் போடப்பட்டுள்ள நிலையில் சில ஆயுதங்கள் காணப்படுவதாக கெப்பிட்டிகொல்லாவ விஷேட பொலிஸ் அதிரடிப் படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் குறித்த இடத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படையினர் நகரத்தை சுற்றி தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது பையொன்றிலிருந்து 56 துப்பாக்கி தோட்டாக்கள், டீ-56 எல்.எம்.ஜி தோட்டாக்கள், டி-56 துப்பாக்கியின் பாகங்கள் மற்றும் எல்.எம்.ஜி ரம்ஸ் எமோ பெல்ட் என்பன மீட்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் இன்று கெப்பிட்டிகொல்லாவ நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாக ஹொரவபொத்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment