Ads (728x90)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்டுப்பாட்டில் உள்ள சீதாவாக்கபுர நகரசபையின் வரவு செலவுத் திட்டம் நேற்று தோற்கடிக்கப்பட்டுள்ளது.

சீதாவாக்கபுர நகர சபையில் பொதுஜன பெரமுனவுக்கு 11 ஆசனங்களும், ஐ.தே.கவுக்கு 11 ஆசனங்களும், ஜே.வி.பிக்கு ஒரு ஆசனமும் உள்ளது.
இங்கு ஆட்சியமைத்துள்ள பொதுஜன பெரமுனவின் சார்பில் நியமிக்கப்பட்ட நகரசபைத் தலைவர் ரணவீர நேற்று 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்தார்.

வரவுசெலவுத் திட்டம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் 11 உறுப்பினர்கள் ஆதரவாகவும், ஐ.தே.க மற்றும் ஜே.வி.பி உறுப்பினர்கள் 12 பேர் எதிராகவும் வாக்களித்து வரவு செலவுத் திட்டத்தை தோற்கடித்தனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget