
*ஆசிய கண்டத்துக்கு வெளியே இந்திய அணி இந்த ஆண்டில் 4 வெற்றிகளை பெற்று இருப்பது இதற்கு முன்பு நடந்திராத ஒன்றாகும். அதாவது தென்ஆப்பிரிக்கா (ஜோகனஸ்பர்க் டெஸ்டில் 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி), இங்கிலாந்து (நாட்டிங்காம் டெஸ்டில் 203 ரன்கள் வித்தியாசத்தில்) மற்றும் தற்போதைய ஆஸ்திரேலிய பயணத்தில் (அடிலெய்டு மற்றும் மெல்போர்னில்) இந்த வெற்றிகள் கிடைத்துள்ளன. இதற்கு முன்பு 1968–ம் ஆண்டு நியூசிலாந்தில் 3 டெஸ்டில் வெற்றி பெற்றதே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.
* விராட் கோலி ‘டாஸ்’ ஜெயித்த டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோற்றதாக வரலாறு கிடையாது. இதுவரை அவர் ‘டாஸ்’ ஜெயித்த 21 டெஸ்டுகளில் இந்திய அணி 18–ல் வெற்றியும், 3–ல் டிராவும் கண்டுள்ளது. 8 வெளிநாட்டு போட்டி வெற்றிகளும் இதில் அடங்கும்.
* ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2 டெஸ்டுகளில் வெற்றி கண்டிருப்பது இது 2–வது நிகழ்வாகும். 1977–78–ம் ஆண்டு தொடரில் இந்தியா 2 டெஸ்டுகளில் வெற்றி பெற்றாலும் அந்த தொடரை 2–3 என்ற கணக்கில் இழந்தது குறிப்பிடத்தக்கது.
*இந்த ஆண்டில் நடந்துள்ள 48 டெஸ்டுகளில் 43–ல் முடிவு கிடைத்திருக்கிறது. 5 போட்டி மட்டுமே ‘டிரா’ ஆகியுள்ளது. குறைந்தது 10 டெஸ்டுகளாவது நடந்த ஆண்டுகளை எடுத்துக் கொண்டால் 2018–ம் ஆண்டில் தான் டிரா எண்ணிக்கை (10.42 சதவீதம்) குறைவாக இருக்கிறது.
Post a Comment