
விபத்தில் அவர் இறந்துவிட்டதாக போலீஸ் கருதுவதுபோன்றும், ஆனால் வெளிநாட்டில் அவர் இருப்பது போன்றும் முதல் பாகம் படத்தை முடித்து இருந்தனர். இரண்டாம் பாகத்திலும் முதியவர் வேடத்துக்கு முக்கியத்துவம் அளித்து திரைக்கதையை உருவாக்கி உள்ளார்.
இதற்காக ஹாலிவுட் மேக்கப் கலைஞர்கள் சென்னைக்கு வந்து கமல்ஹாசனை வயதான தோற்றத்துக்கு மாற்றி படம் எடுத்தனர். அந்த தோற்றம் இப்போதும் அவருக்கு கச்சிதமாக பொருந்தி இருப்பதாக ஷங்கர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். படப்பிடிப்புக்கான பணிகள் தொடங்கி உள்ளன.
வருகிற 14-ந் தேதி சென்னையில் படப்பிடிப்பை தொடங்குகிறார்கள். பொள்ளாச்சியிலும் பெரும்பகுதி படப்பிடிப்பு நடக்கிறது. அரங்குகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது. இந்தியன்-2 முழு அரசியல் படமாக இருக்கும் என்று கமல்ஹாசன் ஏற்கனவே கூறியுள்ளார்.
அரசியல்வாதிகளின் ஊழலுக்கு எதிரான படமாக இருக்கும் என்கின்றனர். 2.0 படத்தைபோல் இந்தியன்-2 படத்தையும் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் பிரமாண்ட படமாக தயார் செய்கின்றனர்.
இதில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Post a Comment