Ads (728x90)

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு பூரணமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் அறிவித்துள்ளது.

நேற்றைய மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுயாதீனமான ஆணைக்குழு என்ற அடிப்படையில் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் இந்த அலுவலகம் தமது பணிகளை முன்னெடுத்து வருகிறது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும், அவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சூழ்நிலையை தெளிவுப்படுத்தவும், அதேநேரம் அவர்களுக்கான இழப்பீட்டை பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget