
குறித்த சந்திப்பு இன்று இரவு 8 மணியளவில் நடைபெறவுள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணி தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் கடந்த வாரமும் சந்திப்பொன்று நடைபெற்றது. என்றாலும் குறித்த சந்திப்பு தீர்மானம் ஒன்று இல்லாமல் நிறைவடைந்தன காரணமாக நேற்று இரவு மீண்டும் சந்திப்பு நடைபெற்ற ஏற்பாடாகியிருந்தன.
என்றாலும் இன்று நடைபெறும் சந்திப்பு ஒரு தீர்மானம்மிக்க சந்திப்பாக இருக்கும் என ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெறும் சந்திப்பின் பின்னர் தீர்வொன்றை பெற்றுக்கொள்ள முடியும் என ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீனும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று இரவு முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்தார். இந்தச் சந்திப்பில் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த மற்றும் வாசுதேச நாணயக்கார, பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிப்பான ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். குறித்த சந்திப்பு ஜனாதிபதி செயலத்தில் நடைபெற்றுள்ளது.
Post a Comment