Ads (728x90)

பசுபிக் கடலின் தெற்குப் பகுதியான நியு காலிடோனியாவில் கடலுக்கு ஆழத்தில் 7.6 என்ற ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனால் அந்த பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 7.6 என்ற அளவு என்பது மிகெப்பெரிய நிலநடுக்கம் ஆகும். இவ்வளவுப் பெரிய  பூகம்பம் கடலுக்கு அடியில் ஆழம் குறைவாக 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளதால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். நிலநடுக்கம் வந்த அருகாமையில் உள்ள லாயல்டி தீவுகளுக்கு 150 கி.மீ. தூரத்தில் இந்த நிலநடுக்க மையம் உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்த மையத்தை சுற்றி 1000 கி.மீ ட்சுற்றளவில் உள்ள பகுதிகளுக்கு சுனாமிப் பேரலைகள் எழும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து அந்தப் பகுதிகளில் உள்ள மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணி துரிதமாக நடத்தப் படுகிறது.

இந்த சுனாமி அலைகள் 5 நிமிடத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை வீசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அலையின் உயரம் 3 மீ வரை இருக்கும் எனவுன் கணிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget