
மொத்தம் 679 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 8,500-க்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
தற்போதைய நிலவரப்படி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் , சத்தீஷ்கார் மாநிலங்களில் காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி முன்னிலை வகித்து வருகிறது. தெலுங்கானாவில் ராஷ்ட்ரீய சமிதி கட்சி 89 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனால் கிட்டதட்ட சந்திரசேகர ராவ் கட்சியின் ஆட்சியே அங்கு உறுதியாகி உள்ளது. மிசோரமில் மிசோரம் தேசிய முண்ணனி முன்னிலை வகிக்கிறது.
சத்தீஷ்கார் மாநிலத்தில் 56 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை, பாஜக 56 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் 106 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ராஜஸ்தானில் காங்கிரஸ் 108 இடங்களில் முன்னிலை வகிக்கிறது பாஜக 76 இடங்களில் முன்னிலை பெற்று உள்ளது.
Post a Comment