
சமூகவலைதளங்களில் வேகமாக வைரலாகி வரும் அந்த புகைப்படத்தில், முழுவதும் வைரம் பதிக்கப்பட்ட எமிரேட்ஸ் விமானம் ஒன்று, பயணத்திற்கு தயாராக இருப்பது போல ஓடுதளத்தில் நிற்பது காண்பிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமானது என்னவெனில், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்-ன் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படம் பகிரப்பட்டுள்ளதால் நெட்டிசன்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. இந்த அலங்கரிக்கப்பட்டுள்ள விமானம் வெறும் புகைப்படம் தான், உண்மையல்ல.
" எமிரேட்ஸ் Bling 777 உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். சாரா சகீல் உருவாக்கிய புகைப்படம்" என டிவிட்டர் பதிவில் கூறியுள்ள விமான நிறுவனம் இது வெறும் புகைப்படம் தான் உறுதிபடுத்தியுள்ளது. சாரா சகீல் எனும் கலைஞரால் முதலில் இந்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டது.
4.8 லட்சம் பின்தொடர்பவர்கள் இருக்கும் அவரின் இன்ஸ்டா பக்கம் தனில், சாதாரணமானவற்றை மின்னும் மற்றும் ஒளிரும் வகையில் மாற்றியுள்ள கண்கவர் புகைப்படங்கள் நிரம்பியுள்ளன. டிசம்பர் 4 அன்று சாரா இந்த விமானத்தின் புகைப்படத்தை பதிவிட்ட நிலையில், இதுவரை 54000 லைக்குகள் பெற்று அசத்தியுள்ளது. இதன் மூலம் அவரின் பாகிஸ்தான்-மிலன் விமான பயணத்திலும் மேம்பட்ட டிக்கெட் பெற்றார்.
இவரின் புகைப்படத்தை பெரிதும் விரும்பிய எமிரேட்ஸ் நிறுவனம், வேறு எதுவும் செய்யவில்லை எனினும், படத்தை டிவீட் செய்தனர். செவ்வாய்கிழமையில் இருந்து இதுவரை அந்த டிவீட் 12000க்கு மேற்பட்ட லைக்குகள், 4000க்கு மேற்பட்ட ரீடிவீட்கள் பெற்றுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த மக்களால் அமைதியாகவே இருக்க முடியவில்லை. வைர விமானத்தைப் பற்றிய தங்களது கருத்துகளை தெரிவித்து சமூகவலைதளத்தை தெறிக்கவிடுகின்றனர்.
Post a Comment