ரணில் விக்ரமசிங்கவின் பெரும்பான்மை பலத்தினை நிரூபிக்க 113 உறுப்பினர்களது ஆதரவே தேவையாகும். இப்பெரும்பான்மைக்கு மக்கள் விடுதலை முன்னணியினரது ஆதரவு அவசியமில்லை. அது அவர்களது தனிப்பட்ட கட்சிசார் தீர்மானமாகும். மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பினரது ஆதரவு இல்லாவிடின் எதிர் தரப்பினரை விட ஐக்கிய தேசிய கட்சிக்கு குறைவான பெரும்பான்மையே காணப்படும் என்று மஹிந்த தரப்பினர் தவறான கணிப்புக்களை முன்னெடுக்கின்றனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தொடர்ந்து ஜனநாயகத்தை பாதுகாக்கவே குரல் கொடுத்து வருகின்றனர். இவர்கள் தற்போதைய ஒரு சில விடயங்களை மாத்திரம் மையப்படுத்தி அரசியல் ரீதியான தீர்மானங்களை ஒருபோதும் எடுக்கமாட்டார்கள். தூரநோக்க சிந்தனையுடன் அரசியல் தீர்வுகளை முன்னெடுக்கவே முனைவார்கள்.
எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாடுகளை ஒருபோதும் செய்யமாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment