இந்த கலந்துரையாடலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் முகமாக 200 நீர் இறைக்கும் இயந்திரங்களை இராணுவத்திடம் தருவதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பிரதேச சபைகள் இருக்கிறது எனவும் குறித்த இயந்திரங்களை அவர்களிடம் கையளிக்குமாறும் இராணுவத்தை கொண்டு எல்லாவற்றையும் செய்வதாயின் பிரதேச சபைகளை மூடிவிடுமாறும் ஆதங்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து பிரதேச சபைகளிடம் ஒப்படைத்து ஆட்கள் பற்றாக்குறை இருப்பின் இராணுவத்தையும் எடுத்து குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக தீர்மானிக்கப்பட்டது.

Post a Comment