Ads (728x90)

இலங்கையில் நிலவிவரும் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி மழை பலமடைந்து வருவதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகளவான மழைவீழ்ச்சி காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வங்காளவிரிகுடாவில் இலங்கையிலிருந்து தென்கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக மழை பெய்து வருகிறது. எதிர்வரும் சில நாட்களுக்கு இந்த மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக வடக்கு, கிழக்கு, வடமத்தி, ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அதிகமான மழைவீழ்ச்சி காணப்படும். மாலை வேளைகளில் அல்லது இரவில் மழைவீழ்ச்சி அதிகமாகவிருக்கும். மத்திய, கிழக்கு, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் காலை வேளையில் பனி மூட்டம் அதிகமாக இருக்கும். மழையின்போது கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கம் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget