Ads (728x90)


இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் காரணமாக தேசிய பொருளாதாரம் மேலும் பாரிய வீழ்ச்சியை நோக்கி செல்லும் என பொருளாதார மற்றும் அரசியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் தொடர்பான சிரேஷ்ட பேராசிரியர் டெரன்ஸ் இது தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆபத்தான நிலை குறித்து பொறுப்பு கூற வேண்டிய ஒருவரும் அது குறித்து அவதானம் செலுத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு முதலீடு, மானியங்கள், சுற்றுலா பயணிகள் வருகை ஆகிய அனைத்தும் தடைப்பட்டுள்ளன. பங்கு சந்தை வீழ்ச்சியடைந்துள்ளது.
இதுவரையில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவில்லை. ஜனவரி மாதம் அரசாங்க செலவு தொடர்பான பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த முறையில் பெருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இவை அனைத்தும் அதிகார போராட்டத்தினால் ஏற்பட்ட நிலைமைகளாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த நிலைமை மேலும் தொடர்ந்தால் எதிர்வரும் காலத்தில் பாரிய ஆபத்துக்கள் ஏற்படும் என கொழும்பு பல்கலைக்கழக பொருளாதார பிரிவு பேராசிரியர் சுரங்க சில்வா தெரிவித்துள்ளார்.

தனி நபர் அல்லது நிறுவனத்திற்கு உட்பட தனியார் பொருளாதார திட்டம் ஒன்றை திட்டமிட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை நுகர்வோர், விற்பனையாளர்கள் உட்பட அனைவருக்கும் தாக்கம் செலுத்தியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget