Ads (728x90)

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதி, நாச்சிமார் கோவிலடிப் பகுதியில் நேற்று  (15.01) வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பட்டப்பகலில் நடைபெற்ற இவ்வாள்வெட்டு சம்பவத்தில் 2 இளைஞர்கள் படு காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டதுடன் அதில் ஒரு இளைஞருடைய வலது கை கட்டைவிரல் துண்டிக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து மீட்கப்பட்ட இருவரும் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களாலேயே இவ் வாள் வெட்டு சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

Recent News

Recent Posts Widget