
சுதந்திர நாடு என்று பிரகடனப்படுத்திக் கொண்ட தைவானை மீண்டும் சீனா உடன் இணைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே தைவானின் பாதுகாப்புக்கு ஒத்துழைக்கும் வகையிலான ஒப்பந்தந்தத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமீபத்தில் கையெழுத்திட்டார். இதனால், கடுப்பான சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்காவுக்கு பதிலடி தரும் வகையில் பேசியுள்ளார்.
சீனாவின் மத்திய ராணுவ கமிஷன் கூட்டத்தில் பேசிய அவர், மிக வேகமாக நவீனமாகி வரும் சீன ராணுவம், போரை எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கூறினார். சீன அதிபரின் இந்த கருத்துக்கள் சர்வதேச அளவில் பரபரப்பை உள்ளாக்கியுள்ளது. ஏற்கனவே, தென்சீனக்கடல் விவகாரத்தில் சீனாவும் அமெரிக்காவும் மோதி வருவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment