வட மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 15ம் திகதி செவ்வாய்க்கிழமை தைப்பொங்கல் தினம் என்பதால் அதற்கு முந்திய நாள் திங்கட்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலாக அடுத்துவரும் வார இறுதி நாள் ஒன்றில் பாடசாலையை நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் வடமாகாண ஆளுநர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
Post a Comment