
மலாய்காவும், அர்ஜுனும் ஜோடியாக ஊர் சுற்றுகிறார்கள், பார்ட்டிகளுக்கு செல்கிறார்கள். அவர்கள் காதலிப்பது தெரிந்தும் அனைவரும் கிசுகிசுக்கிறார்களே தவிர அதை யாரும் வெளியே சொல்லவில்லை. காதல் விஷயத்தில் அர்ஜுன் தனது அப்பாவின் பேச்சை கேட்க தயாராக இல்லையாம்.
அண்மையில் மலாய்கா அர்ஜுன் கபூருடன் வெளிநாட்டிற்கு சென்று வந்தார். டிவி நிகழ்ச்சியில் என்ன மலாய்கா வெளிநாட்டு போனீங்க போல, தனியாக போன மாதிரி தெரியலையே என்று கூறி அவரை பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் கலாய்த்தார். மலாய்காவும் சிரித்து மழுப்பினார். கரண் கலாய்த்தபோது மனிதருக்கு தில்லு தான் என்றார்கள் ரசிகர்கள்.
காபி வித் கரண் நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள் கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் கலந்து கொண்டு கரண் ஜோஹார் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்தார்கள். ராகுலிடம் உங்களுக்கு யார் மீது அதிகம் ஈர்ப்பு இருந்தது என்று கேட்டதற்கு மலாய்கா அரோரா என்று பதில் அளித்தார் ராகுல்.
மலாய்கா மீது தற்போது ஈர்ப்பு இல்லை என்று ராகுல் கூறினார். இதை கேட்ட கரணோ, ஏன் மலாய்கா அர்ஜுனை காதலிப்பதால் ஈர்ப்பு இல்லாமல் போய்விட்டதா என்று ராகுலிடம் கேட்டார். இதன் மூலம் மலாய்கா, அர்ஜுன் காதலிப்பதை கரண் உறுதி செய்துள்ளார். முன்னதாக காபி வித் கரண் நிகழ்ச்சிக்கு வந்தபோது தான் ஒருவரை காதலிப்பதாக கூறிய அர்ஜுன் கபூர் அவரின் பெயரை தெரிவிக்க மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment