Ads (728x90)

மன்னார் மனிதப் புதைக்குழியின் அகழ்வு இடம்பெறும் பகுதி இன்று முதல் விஷ்தரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 21ம் திகதி முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிந்த அகழ்வு நடவடிக்கைகள் நேற்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி தற்போது குறித்த பிரதேசத்தின் பாதுகாப்பு வேலிகள் நீக்கப்பட்டு, அதனை விஷ்த்தரிக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அகழ்வுப் பணிகளுக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

122 தினங்கள் இதுவரையில் அங்கு அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
இதன்படி 283 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுள் 274 எச்சங்கள் வெளியில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகளை அமெரிக்காவிற்கு பரிசோதனைக்காக அனுப்பும் நடவடிக்கையும் இந்த மாதம் இடம்பெறும் என்றும் சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget