
கடந்த வருடம் டெலிவிஷனில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் அவருக்கு மணப்பெண் தேடல் நடந்தது. இதில் 16 பெண்கள் பங்கேற்றனர். இறுதி போட்டிக்கு 3 பெண்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவரை மணப்பெண்ணாக தேர்வு செய்வார் என்று எதிர்பார்த்த நிலையில் யாரையும் திருமணம் செய்யாமல் விலகி விட்டார். ஒருவரை மணந்தால் மற்ற இருபெண்கள் மனது புண்படும் என்று காரணம் சொன்னார். அதன்பிறகு தொடர்ந்து படங்களில் நடித்தார்.
இந்த நிலையில் ஆர்யாவுக்கும் நடிகை சாயிஷாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி உள்ளது. சாயிஷா தமிழில் வனமகன், கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கஜினிகாந்த் படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கிசுகிசுக்கின்றனர்.
இருவரும் ரகசியமாக சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் தகவல் பரவி உள்ளது. இதனை ஆர்யா உறுதிப்படுத்தவில்லை.
Post a Comment